fbpx

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தும் திட்டம் இல்லை” என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ என்ற பெயரில் பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரத்தைய மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படும் நிதியுதவியை 12,000 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, லோக்சபாவில், ரூ.6 ஆயிரத்தை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை உயர்த்தும் திட்டம் உள்ளதா? என எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, விவசாயிகள் நிதியுதவி தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் தற்போது பரிசீலனையில் இல்லை. இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வகை செய்யப்படும் வகையில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் உள்ளது. இதுவரை 15 தவணைகளாக 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Kokila

Next Post

பொதுத்தேர்வு!… கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி எச்சரிக்கை!

Thu Feb 8 , 2024
பொதுத்தேர்வுகளில் புகார்கள் எழுந்தல், கண்காணிப்பாளர் மட்டுமின்றி, மையத்தை நிர்வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இவற்றில், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை சார்பில், நேற்று முன்தினம் திருச்சியில், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கல்வி […]

You May Like