fbpx

கிராமப்புற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000..!! யாரெல்லாம் இணையலாம்..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!!

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பீமா சகி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 9) இன்று ஹரியானாவில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்குவதற்கு முன்னரே பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கிராமப்புற பெண்களை சுயதொழில் செய்து அவர்களை தன்னிறைவு பெறச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் மூலம் பெண்களுக்கு காப்பீட்டு முகவர்களாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 வரை நிதியுதவி கிடைக்கும். இத்திட்டத்தின் நோக்கம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும், நிதியுதவியும் வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் காப்பீட்டு முகவர்களாகி வீடு வீடாகச் சென்று காப்பீட்டுச் சேவைகளை வழங்குவார்கள்.

இத்திட்டத்தில் இணையும் பெண்களுக்கும் முதலாண்டில் மாதந்தோறும் ரூ.7,000 கிடைக்கும். 2-வது ஆண்டில் இந்த தொகை ரூ.6,000 ஆக குறைக்கப்படும். 3ஆம் ஆண்டில் மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், பெண்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 2,100 கிடைக்கும். காப்பீட்டு இலக்கை முடித்தவுடன் கமிஷன் தொகை உள்ளிட்ட உதவிகளும் கிடைக்கும். இத்திட்டத்தில் சேர பெண்ணின் வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!!

English Summary

The central government has launched a scheme called Bima Sakhi Yojana for the economic empowerment of women.

Chella

Next Post

சிரியாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!. இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது!. வெளியுறவுத்துறை தகவல்!

Mon Dec 9 , 2024
Syria: சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. சிரியாவில் உள்ள […]

You May Like