வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் படம் பார்க்க ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை போன்ற திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது தற்போது ஆடம்பர செலவாக மாறிவிட்டது.. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரூ.1000 இல்லாமல் திரையரங்குகளில் படம் பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது..
டிக்கெட் விலை காரணமாக தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதுதவிர கொரோனா ஊரடங்கு காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஓடிடி தளங்களும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.. தற்போது பலரும் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்றைய தினத்தில் மட்டும் படம் பார்க்க ரூ.75 கொடுத்தால் போதும் என்று கூறப்படுகிறது.
பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்க உள்ளன. திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது..