fbpx

வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.820 கோடி..!! வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என பல பலமொழிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிர்ஷ்டம் வந்துவிட்டால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் கூட நடக்கலாம். அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது நடந்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் தவறாக டெபாசிட் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இந்த பணம், தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணத்தை திருப்பி எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளில் தவறாக விழுந்த 820 கோடியில் இதுவரை, 649 கோடி ரூபாய் திருப்பி எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணம் விழுந்த வாடிக்கையாளர்களின் கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது.

மனித தவறின் காரணமாக பணம் தவறாக விழுந்ததா அல்லது யாரேனும் ஹேக் செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து வங்கி நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உடனடி பணம் செலுத்தும் சேவையின் (IMPS) மூலம்தான் இந்த பணம் மாற்றப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சேவை வருகிறது. நிகழ்நேரத்தில் எந்த வித தலையீடும் இன்றி, நேரடியாக நடக்கும் பண பரிமாற்றமே IMPS என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அளித்த விளக்கத்தில், “மீதமிருக்கும் 171 கோடி ரூபாயை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Job: ரூ.25,000 ஊதியத்தில் BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…!

Fri Nov 17 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like