fbpx

திடீரென அக்கவுண்டில் விழுந்த ரூ.9,900 கோடி!… அதிர்ச்சியடைந்த நபர்!… விளக்கமளித்த அதிகாரிகள்!

UP: உத்தரபிரதேசத்தில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென விழுந்த ரூ.9,900 கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ள செய்தி சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் பரோடா உபி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில், வழக்கம்போல், வங்கி கணக்கில் பேலன்ஸை செக் செய்துள்ளார். அப்போது ரூ.99 கோடியே 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999 அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து வங்கிக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணையில், பானு பிரகாஷின் கணக்கு கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு என்றும், அது துரதிர்ஷ்டவசமாக செயல்படாத சொத்தாக (என்பிஏ) மாறிவிட்டது என்றும் வங்கி தெளிவுபடுத்தியது. மேலும் இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் ரோஹித் கெளதம் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் தவறுதலாக நிகழ்ந்ததாக விளக்கமளித்துள்ளார். மேலும், தொழில்நுட்ப கோளாறில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இதையடுத்து இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

Readmore: 260 பேரை கூண்டோடு கைது செய்த ஈரான்!… சாத்தானியம் மற்றும் ஆபாச கலாச்சாரத்தை பரப்பியதால் அதிரடி!

Kokila

Next Post

மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்கவில்லை!… எதிர்க்கட்சி அரசுகளின் நலதிட்டங்களை பிரதமர் இழிவுபடுத்துகிறார்!… ஸ்டாலின் விளாசல்!

Sun May 19 , 2024
Modi vs stalin: பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததற்காக, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளின் மக்கள்நல திட்டங்களை பிரதமர் இழிவுபடுத்துவதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெற்றி முகட்டை நோக்கி இண்டியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் […]

You May Like