fbpx

ரூ. 5 கோடி செலவில் அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!… குவியும் பாராட்டுகள்!

திருவாரூர் மாவட்டத்தில் அமுர்தீன் என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ரூ. 5 கோடியில் தன் தாய்க்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமுர்தீன். இவர் சென்னையில் பிரபல தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் 11 வயதாக இருக்கும்போது தந்தை அப்துல்காதர் உயிரிழந்தார். அதன்பின்னர், அவரது தாய் ஜெய்லானி பீவி தன் மகன் மற்றும் மகள்களை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற உதவி உள்ளார்.

இதையடுத்து, தன் தாய்க்கு ஒரு நினைவில்லம் கட்ட முடிவெடுத்து, டெல்லியில் உள்ள தாஜ்மஹால் போன்று தன் தாய்க்கு ரூ. 5 கோடியில் நினைவில்லம் கட்டி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி இந்த நினைவில்லம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவில்லம், திருவாரூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது தென்னகத்தின் தாஜ்மஹால் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

ஷாக்...! 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது..‌.! தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு...!

Sun Jun 11 , 2023
தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்‌ உடற்கல்வி, ஓவியம்‌, கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில்‌, பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம்‌ பேர்‌ பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு வெளியிட்ட […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like