fbpx

கச்சத்தீவு விவகாரம்… 2015-ல் பெறப்பட்ட RTI கடிதம்…! அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்…!

சென்னையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் RTI கடிதத்தை காண்பித்து பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்; யாரும் யாருக்கும் கச்சத்தீவை தாரை வார்க்கவில்லை. இது ஒரு உடன்பாடு. இலங்கை கடல் பகுதியில் இந்த தீவு இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டோம் என்று சொல்கிறது, 27.01.2015-ல் பெறப்பட்ட இந்த RTI கடிதம். அதனை வழங்கியதும் இதே நரேந்திர மோடி அரசுதான் என சென்னையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் RTI கடிதத்தை காண்பித்து பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

Vignesh

Next Post

வெளவால், எலிகளை விட கொடியது!… இந்த விலங்குதான் இருமடங்கு வைரஸ்களை பரப்புகிறது!… ஆய்வில் அதிர்ச்சி!

Fri Apr 5 , 2024
Virus: வௌவால், எலிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து நாம் பெறுவதை விட மனிதர்களே அதிகமான வைரஸ்களை பரப்புகிறார்கள் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக அச்சுறுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போதுதான் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில், பல ஆண்டுகளாக, எலிகள் மற்றும் வெளவால்கள் போன்ற விலங்குகள் மனிதர்களுக்கு நோய்களை பரப்புகின்றன. இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, விலங்குகளைவிட மனிதர்களே […]

You May Like