Russia – Ukraine: கிழக்கு உக்ரைன் நகரமான சுமியில் குடியிருப்பு வளாகத்தில் ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று வயதான தம்பதிகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த போரை முடிவுக்குக்கொண்டு வர பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பதவியேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் மீதான போரை கைவிடாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இருப்பினும், உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில், நேற்று காலை வடகிழக்கு உக்ரைனிய நகரான சுமி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 13 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கட்டிடங்கள், கடைகள் மற்றும் கார்கள் ட்ரோன்கள் தாக்குதல்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் உக்ரைன் மீது இரவு முழுவதும் 80க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளதாகவும், அதனை உக்ரைன் ராணுவமும் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள் என்றும் பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…! தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி…!