fbpx

அண்டை நாடுகளுக்கு நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்.. எல்லையில் கூட்ட நெரிசல்.. என்ன காரணம்..?

உக்ரைன் போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்..

கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி தொடங்கியது.. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்..? உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷ்யர்களை அணி திரட்ட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார். எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல ரஷ்யர்களுக்கு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷ்ய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ரஷ்யா-ஜார்ஜியா எல்லயைில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல் ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பலர் சைக்கிளிலேயே கூட அண்டை நாடுகளுக்கு செல்ல தயாராக உள்ளனர்..

புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன. இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனாலேயே ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷ்ய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியாவுக்கு பேருந்தில் வந்த 29 வயதான அலெக்ஸி, சிஎன்என் உடன் பேசிய போது, ‘எனது குடும்பத்தில் பாதி பேர் உக்ரைனியர்கள். உக்ரைன் போரில் புதின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். ரிசர்வ் ராணுவத்தினரின் பகுதியளவு நிலைநிறுத்தம் இந்த சண்டையின் போக்கை மாற்றும் என்று அவர் நம்புகிறார். ஆனால் ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது..” என்று தெரிவித்தார்..

சமூக ஊடக தளங்களில் உள்ளவர்கள் வெளிநாட்டில் எப்படி குடியேறுவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள், சிலர் சைக்கிள் மூலம் எல்லையைத் தாண்டுவதையும் கருத்தில் கொள்கிறார்கள். ரஷ்யாவுடனான நாடுகளின் எல்லைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. ரஷ்யா-கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வாகனங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன.. 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

Maha

Next Post

மாணவர்கள் இதை செய்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை...

Sat Sep 24 , 2022
படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.. பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.. பேருந்து படிகட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது, சீருடையிலேயே மதுபானம அருந்துவது பிற போதை பொருட்களை பயன்படுத்துவது என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர் கதையாகி […]

You May Like