fbpx

2020 தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால்.. ரஷ்யா-உக்ரைன் போர் நடந்திருக்காது..!! – அமெரிக்க அதிபருக்கு ரஷ்ய அதிபர் புகழாரம்

2020 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால், உக்ரைனுடனான போரை அவர் தடுத்திருப்பார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசின் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய புதின், டிரம்ப்பை புத்திசாலித்தனமான தலைவர் என்று வர்ணித்தார்.

புதினுடன் பேச ஆர்வமாக உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், மாஸ்கோவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். உக்ரைனுடனான மோதல் குறித்து ஆலோசனை நடத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை ஏற்கனவே பலமுறை கூறியதாகவும், மீண்டும் சொல்கிறேன் என்றும் புடின் கூறினார்.

டிரம்ப் மிகவும் சுறுசுறுப்பான நபர் என்றும், விஷயங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் அவர் கூறினார். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால், அவரது வெற்றியைத் திருடாமல் இருந்திருந்தால் உக்ரைன் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றார். பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனில் இருந்து அழைப்பிற்காக காத்திருப்பதாக புடின் கூறினார்.

Read more : FSSAI உத்தரவை தொடர்ந்து சிவப்பு மிளகாய் பொடியை திரும்ப பெற்றது பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம்..!!

English Summary

Russian President Vladimir Putin says war would have been inevitable if Trump had won

Next Post

நக்மா முதல் த்ரிஷா வரை.. 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத பிரபல நடிகைகள்..!!

Sat Jan 25 , 2025
From Nagma to Trisha.. Famous actresses who have not married past 40

You May Like