fbpx

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!. அதிபர் புதின் கவுரவிப்பு!. எனது நாட்டு மக்களுக்கு கிடைத்த கவுரவம் என பெருமிதம்!

Modi Honoured: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் பாரத் ரத்னா விருது வழங்கிய புதின் கவுரவித்துள்ளார். இது எனது நாட்டு மக்களுக்கு கிடைத்த கவுரவம் என்று பிரதமர் மோடி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா 22ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்க, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அதிபர் புதின் கவுரவித்துள்ளார். இந்த விருது கடந்த 2019-ம் ஆண்டு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடையில் கோவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் “புனித அந்திரேயா அப்போஸ்தலரின் ஆணை பெறுவதில் பெருமைப்படுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார். அதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். “ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதைப் பெற்றதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த கௌரவம் அல்ல, எனது நாட்டின் 140 கோடி மக்களின் கவுரவம். இது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான ஆழமான நட்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த மரியாதையாகும் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது பிரான்ஸ் பயணத்தின் போது பிரான்சின் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: 8 வருட லவ்.. திருமணம் ஆன 2 மாதங்களில் உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை..!! – மனைவி உருக்கம்

English Summary

Russia’s highest award for Prime Minister Modi! Honoring President Putin! Proud to be honored by my countrymen!

Kokila

Next Post

சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு பெறலாமா..! முழு விவரம்…!

Wed Jul 10 , 2024
Can we get compensation up to Rs.50 lakh in case of accident due to cylinder explosion..! Full Details...!

You May Like