fbpx

விமர்சனங்கள் எழுந்தவுடன் தப்பித்துக்கொள்ள ஊழியர்களை பலியாக்குவதா..? சீமான் கண்டனம்..!!

சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டும் பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த ஆன்மிக சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றியும், பள்ளிக்கல்வித்துறைக்கும் தெரியாமல் நடைபெற்றதா? எனில் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் நடைபெற்றது என்றால் அவர்களுக்கு என்ன தண்டனை? அனைத்தையும் அனுமதித்து விட்டு, விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள கடைநிலை அரசு ஊழியர்களை பலியாக்குகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டனர். தற்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகத்தில் எத்தகைய தவறு நடந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தவறுக்கான முழுப்பொறுப்பை ஏற்று, இனி அந்த தவறுகள் நிகழாது என உறுதியளித்து செயல்படுவதுதான் ஒரு நல்ல அரசின் நிர்வாக நடைமுறை. எனவே, தலைமையாசிரியரின் இடமாற்ற தண்டனையை அரசு திரும்பப்பெற வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நிகழாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More : ’கட்சியை விட்டு விலகினாலும் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்’..!! ’சீமான் மீது கோபம்’..? மவுனம் கலைத்த காளியம்மாள்..!!

English Summary

Seeman has said that the transfer of the headmaster who had given permission for the spiritual discourse in Chennai’s Ashoknagar school should be revoked.

Chella

Next Post

மனைவி பெயரில் வீடு வாங்கினால் இத்தனை சலுகைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

Sat Sep 7 , 2024
What are the benefits of buying a house in the name of the wife? Very few people know about this benefit

You May Like