fbpx

2030க்குள் சாகா வரம்!… மனிதர்களின் மரணத்தை தடுக்கும் ரோபோ!… கூகுள் முன்னாள் விஞ்ஞானி தகவல்!

2030ஆம் ஆண்டுக்குள் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெற வாய்ப்பு உள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அதேபோல் இன்டர்நெட் வசதி, வயர்லெஸ் தொழில்நுட்பம் போன்றவை பற்றியும் ரே குர்ஸ்வேல் கூறிய கணிப்புகள் துல்லியமாக நடந்துள்ளன.

மனிதர்கள் சாகாவரம் பெறுவது பற்றி ரே குர்ஸ்வேல் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 2005ஆம் ஆண்டு வெளியான `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’ (The Singularity is Near) என்ற புத்தகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் மரணமில்லாத வாழ்க்கையை அடைய தொழில்நுட்பம் உதவும் எனக் கூறியிருப்பதை நினைவுகூர்ந்தார்.”மரபியல், ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விரைவில் ‘நானோபோட்ஸ்’ (Nanobots) வரவுள்ளன. இந்த மிக நுண்ணிய ரோபோக்களை நரம்புகள் வழியாக மனித உடலில் செலுத்த முடியும். இவை 50 – 100 நானோ மீட்டர் மட்டுமே அகலம் கொண்டிருக்கும். ஏற்கெனவே, டிஎன்ஏ ஆய்விலும் செல் இமேஜிங்கிலும் நானோபோட் பயன்பாட்டைக் காணமுடிகிறது” என்று அவர் சொல்கிறார்.

“முதுமை அடைதல், உடல்நலக் குறைபாடு போன்றவற்றில் இருந்து மனிதர்களை காக்கவும், உடலில் உள்ள செல்களில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்யவும் நானோ ரோபோவை பயன்படுத்தலாம். அப்போது மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாம், அதே சமயத்தில் ஒல்லியாகவும் உறுதியாகவும் இருக்கலாம்” என்கிறார் குர்ஸ்வேல். 2003ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது, உடலில் உள்ள நானோ ரோபோ அவற்றை வெளியேற்றும் வேலையைச் செய்யும் என தெரிவித்திருந்தது.

Kokila

Next Post

உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இதை மட்டும் சாப்பிடுங்க!

Thu Apr 6 , 2023
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க சாப்பிட வேண்டிய, உணவுகள் குறித்து இங்கு காண்போம்… அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு பொருளாகும். ஏனெனில் அவலில் கலோரிகள் குறைவாக உள்ளது, இதில் சிறந்த புரோபயாடிக் உள்ளதால் ஜீரணிக்க எளிதானது. இதனால் தேவையற்ற […]

You May Like