fbpx

Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய திருடன் அதிரடி கைது..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

மும்பையில் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பாலிவுட் காதல் ஜோடிகளாக இருந்து திருமண தம்பதிகளாக மாறியவர்கள் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது நடிப்பில் அண்மையில் தெலுங்கில் ‘தேவரா’ படம் வெளியானது. பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண், கொள்ளையனை தடுத்துள்ளார். இதையடுத்து, கொள்ளையன் பணிப்பெண்ணை தாக்க முயன்றதால் அவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த சைஃப் அலிகானை கொள்ளையன் 2, 3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதில் சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில் தான், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”அதிமுகவும் இல்ல.. தவெகவும் இல்ல”..!! இதுதான் சரியான டைம்..!! திமுகவை அட்டாக் செய்ய காத்திருக்கும் சீமான்..!!

English Summary

An arrest has now been made following the incident of actor Saif Ali Khan being stabbed and then escaping, causing a stir.

Chella

Next Post

”உங்கள் கருத்தை ஏற்க முடியாது”..!! பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!! எந்த வழக்கில் தெரியுமா..?

Fri Jan 17 , 2025
The Madras High Court has granted bail to popular YouTuber Savukku Shankar, who was arrested for spreading false information regarding the land grabbing case.

You May Like