நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கரும்பு விவசாயி சின்னம் கேட்கப்பட்ட நிலையில், அது வேறு கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நாளை (மார்ச் 26) விசாரணைக்கு வருகிறது.
Read More : BREAKING | தமிழ்நாடு முழுவதும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்..!! மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!