fbpx

விடுப்பு எடுத்தால் சம்பளம் கட்!! பள்ளிக்கல்வித்துறை முடிவு!!

பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக புகார்கள் வந்தனது. இதனால், பளளிக்கல்வித்துறை இது குறித்து ஆலோசனை நடத்தியது. பகுதி நேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு மூன்று அரை நாள்கள் பணி புரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை 4 வாரங்கள் முழுமையாக பள்ளிகள் செயல்படாத மாதங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் 12 அரை நாட்கள் பணியாற்றும் வகையில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளமே ரூ.10,000 தான். பணி நிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது விடுமுறை எடுக்கக்கூடாது எனவும் எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

பதினைந்து மாவட்டங்களுக்கு ’’சிவப்பு எச்சரிக்கை’’!!

Thu Nov 10 , 2022
பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்கின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை அதிகரித்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10, 12 தேதிகளில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

You May Like