மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பதால், மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்பதால், அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 129க்கு மேல் இருப்பதால், இந்த ஆண்டின் இரண்டாவது டிஏ உயர்வு ஜனவரி 2022 இல் முந்தைய 3 சதவீதத்திற்கு எதிராக 4 சதவீதமாக உள்ளது. எனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.. அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் செப்டம்பர் மாதம் நவராத்திரியின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையானது மத்திய ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.. அகவிலைப்படி உயர்வு அடிப்படையில் கணக்கீடுகளின்படி, ரூ. 31,550 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,144 உயர்வு இருக்கும். மறுபுறம், அதிகபட்ச வரம்பில் ரூ.56,900 அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு ரூ.27,312 உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.