fbpx

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட வற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இதையடுத்து, ஜனவரி 3ஆம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ”கடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை தொடர்பாக வாரியம் தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை. அரசு ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கிறோம். எங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தானே தவிர அரசு அல்ல. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்” என அறிவித்துள்ளனர்.

Chella

Next Post

அதிர்ச்சி..!! ‘வாரிசு’ படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் மரணம்..!! சோகத்தில் படக்குழுவினர்..!!

Fri Jan 6 , 2023
வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் காலமானார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ’வாரிசு’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருக்கிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு […]
அதிர்ச்சி..!! ‘வாரிசு’ படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் மரணம்..!! சோகத்தில் படக்குழுவினர்..!!

You May Like