Senior Finance Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை துறைமுக அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Senior Finance Executive
பணியிடம் : சென்னை
காலியிடங்கள் : 3
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : எத்தனை ஆதார் கார்டு இருந்தாலும் ஒரு மொபைல் நம்பர் போதும்..!! மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?