உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் ஸ்காட்லாந்தில், மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம், சுயத்தொழில் செய்ய விருப்பமின்மை மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதை அடுத்து பலர் வேலை இழந்து உள்ளனர். மேலும் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது, பல்வேறு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்காட்லாந்து நாட்டின் அபீர்டீன் நகரத்தில் ஆயில் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்திற்கு offshore rigger பணிக்கு ஆட்கள் தேவை என 20 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணிக்கு மாதம் ரூ.லட்சம் சம்பளமும், சுற்றுலா சலுகைகளும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியும் உள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த பணியில் ஆழ்கடலுக்குள் எண்ணெய் கிணறுகளை தோண்டி அவற்றிலிருந்து எண்ணெய் மற்றும் கேஸ் எடுத்து அவற்றை சுத்திகரித்து பிரித்து கரைக்கு கொண்டு வர வேண்டும். இந்த பணிக்காக பணியமத்தப்படும் நபர்கள் தினமும் 36,000 அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகள் தங்கி இரண்டு ஷிப்டுகள் வேலை செய்தால் அடுத்த ஆறு மாதத்தில் அவர்கள் வெளிநாட்டு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வேலைகள் சேர தகுதி உள்ள நபர்கள் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும் என்றும் அதாவது அடிப்படை கடல் பாதுகாப்பு தூண்டல் மற்றும் அவசரப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்றும் கடல் சார் அவசர பயிற்சி முடித்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிவிப்பு வெளியாகிய 24 நாட்கள் ஆனபோதிலும் ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதன் பிறகு இன்னும் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படும் நிலையில், இது சம்பந்தமான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.