கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை கொண்டு சம்பளம் வழங்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இதுவரை 42 லட்சம் பேர் ஆதார் இணைக்கவில்லை. இவர்கள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் அடிக்கடி வங்கிக் கணக்கை மாற்றுவதால் ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.