இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேர்க்கானலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (IRCON) ஆனது பஞ்சாப், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சென்னை – தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் Works Engineer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17-04-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் பின்வருமாறு: Work Engineer/ Civil on Contract Basis – 31 பணியிடங்கள், Work Engineering/ Electrical on Contract Basis – 2 பணியிடங்கள்
Work Engineer/S&T on Contract Basis – 1 பணியிடம்.IRCON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Degree in Civil / Electrical Engineering/ Graduation முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மாதம் ரூ.36,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.சென்னையில் உள்ள ஆர்வமுள்ளர்வர்கள் இப்பணிக்கு IRCON Southern RegionalOfficeB2-318, III Floor, ThungabadraBlock, National Games Village,Kormangala, Bengaluru-560047 என்ற முகவரியில் 24 ஏப்ரல் 2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.