fbpx

அரசியல் கட்சிகளுக்கு SBI முக்கிய அறிவிப்பு…! அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை…!

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது .

இத்திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தனிநபராக இருக்கும் ஒருவர், தனியாகவோ அல்லது மற்ற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற. ,அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும் தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.

02.01.2024 முதல் 11.01.2024 வரை, 30-ம் கட்ட விற்பனையில், பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குதான் செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால், பணம் பெறும் எந்த அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது. தகுதியான அரசியல் கட்சி தனது கணக்கில் டெபாசிட் செய்யும் தேர்தல் பத்திரம் அதே நாளில் வரவு வைக்கப்படும்.

Vignesh

Next Post

திமுக, அதிமுகவை கதிகலங்க வைக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பழைய கேஸ் கட்டுகள்..!! இன்று முதல் விசாரணை..!!

Tue Jan 2 , 2024
சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முதல் விசாரணை நடத்துகிறார். தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீதான இரு சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2006 – 2011 ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், 1996 – 2001ஆம் ஆண்டு […]

You May Like