fbpx

சேலம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கீ எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பணிகளை கவனிக்க எம்.கே.செல்வராஜ், பாலு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார்.

இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read more : காதுல எந்த நேரமும் ஹெட் ஃபோனா? இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!! – எச்சரிக்கும் மருத்துவர்கள்  

English Summary

Salem District A.D.M.K. Secretary removed from party..!! – Edappadi Palaniswami announcement

Next Post

நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய ரவுடி கருக்கா வினோத்..!! ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆஜரானபோது அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Jan 29 , 2025
Suddenly, Karuka Vinod took off the sandals he was wearing and threw them at the judge.

You May Like