fbpx

‘மளிகைக் கடையில் மது விற்பனை’ சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் சர்வ சாதாரணமாக மளிகைக் கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பட்டப்பகலிலேயே மது விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவில், ஒருவர் கடை உரிமையாளரான பெண்ணிடம் மது பாட்டில்  வேணும் எனக் கேட்க, அந்தப் பெண்  காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு, ‘எடுத்து வர போயிருக்காங்க” எனச் சொல்கிறார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மது பாட்டில்களை கொடுக்கிறார். 175 ரூபாய்க்கு விற்கப்படும் மது அந்த கடையில் 210 ரூபாய்க்கு விற்கப்படுவது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Next Post

'அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கவில்லை' - ஆளுநர் மாளிகை விளக்கம்!

Mon May 13 , 2024
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசியபோது, முத்துராமலிங்க தேவர் மற்றும் அண்ணாக்கும் இடையே நடந்ததாக ஒரு நிகழ்வினை பகிர்ந்தார். அதாவது, முத்துராமலிங்க தேவர் அண்ணாவை பார்த்து ” கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை தப்பாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு […]

You May Like