fbpx

சல்மான் கான்’ டூப்  கலைஞர்’ மாரடைப்பால் மரணம்… ஜிம் உடற்பயிற்சியில் சுருண்டு விழுந்தார்…

சல்மான் கானுக்கு திரைப்படத்தில் டூப் போடும் கலைஞர் ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

இந்தி திரையுலகில் சல்மான்கானுக்கு டூப் போடும் பிரபல கலைஞர் சாகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 50 வயது நிரம்பிய சாகர் நல்ல உடற்தகுதிவாய்ந்தவர். தினமும் அவர் உடற்பயிற்சிசெய்து தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வந்திருக்கின்றார். சமீபத்தில் ’பஜ்ரங்கி பைஜான்’ ’டியூப்லைட் ’ தபாங் போன்ற திரைப்படங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் டூப் போட்டுள்ளார். அவர் நேற்று மும்பையில் ஜி் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கின்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் அருகில் உள்ள பாலா சாகிப் தாக்கரெ என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபபட்டார். ஆனால் எந்த பலனுமில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சல்மான்கானும் சாகர் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ’’ என்னுடைய இதயத்தில் என்றும் நீ என்னுடன் இருப்பாய். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சாகர் சகோதரரே ’’ என குறிப்பிட்டு தான் இந்த செய்தியால் மிகவும் நொறுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாகர்பாண்டேவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

உடற்பயிற்சியின்போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. கர்நாடகாவின் பவர்ஸ்டார் என குறிப்பிடப்படும் புனித்ராஜ்குமார் இதே போல ஜிம்மில் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தற்போது டூப் கலைஞர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரியில் திடீர் மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி

Sun Oct 2 , 2022
சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய […]

You May Like