fbpx

கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டு வேலைக்கு செல்லும் சல்மான்கான் பட நடிகை!…

சல்மான் கானின் இணை நடிகையான பூஜா தட்வால், காசநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டார். இதனால் அவர் தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வீடு ஒன்றில் வேலைக்காரியாக பணியாற்றி வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மும்பையை சேர்ந்த நடிகை பூஜா தட்வால் 1977ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஈர்ப்பு கொண்டிருந்த இவர், தன் திறமைகளை மெருகேற்றுவதற்காக, தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தினார். அதன்படி, தனது 17 வயதிலேயே சல்மான் கானுக்கு ஜோடியாக வீரகதி (1995) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். இருப்பினும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை. இதனால், குறுகிய காலத்திலேயே சினிமா பயணம் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, அவர் ஆஷிகி (1999) மற்றும் கரானா (2001) ஆகிய இரண்டு வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் தோன்றினார்.

இதையடுத்து, திருமண வாழ்க்கையை தொடங்கிய பூஜா, கணவருடன் கோவாவில் செட்டில் ஆனார். அங்கு அவர் தனது கணவரின் சூதாட்ட விடுதியை நிர்வகித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 2018ம் ஆண்டு பூஜா கொடிய நோயான காசநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, பூஜாவுடனான திருமண உறவை கணவர் முடித்துக்கொண்டதால், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பூஜா, மருத்துவ உதவி, வேலை ஏதுமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினார்.

இந்த சவாலான காலகட்டத்தில், யூடியூப்பில் வீடியோ செய்தி மூலம் நிதி உதவிக்காக சல்மான் கானை அணுகினார் பூஜா, அடுத்த ஆறு மாதங்களில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து பதிலளித்தார். போஜ்புரி நடிகர் ரவி கிஷனிடமிருந்தும் அவர் நிதியுதவி பெற்றார். இதையடுத்து, வீட்டு வாடகை கூட செலுத்தமுடியாததால், வீடு ஒன்றில் வேலைக்காரியாக பணியாற்றியுள்ளார். இதையடுத்து மீண்டும் 2020 ஆம் ஆண்டில், குரு நானக் தேவ் ஜி கா என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ரிஎண்ட்ரி கொடுத்தார். அந்தப்படமும் அதிக கவனத்தைப் பெறாததால், தனது தேவைகளை பூர்த்தி செய்ய, பூஜா தற்போது டிபன் சேவையை நடத்தி வருகிறார், இது அவரது மாதாந்திர செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது.

Kokila

Next Post

’மூளையே இல்லாத முட்டாப்பையன்’..!! ரவீனாவின் விளையாட்டால் கடுப்பான மணி..!! வறுத்தெடுத்த பூர்ணிமா..!!

Wed Oct 25 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் கேம் விளையாட வந்தார்களா? ரொமான்ஸ் பண்ண வந்தார்களா? என்கிற கேள்வி அங்குள்ள போட்டியாளார்களுக்கே உள்ளது. அந்த அளவுக்கு இருவரும் எப்போதுமே ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். இதனால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ் இதை காரணமாக வைத்தே இருவரையும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் தான் பிரச்சனை என்று, மணியை தூக்கி […]

You May Like