கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் ருஷ்டிக்கு ஆகஸ்ட் மாதம் மும்பையில் பிறந்த எழுத்தாளர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்தி தாக்குதலைத் தொடர்ந்து அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது மற்றும் அவரது ஒரு கை செயலிழந்துள்ளது என்று அவரது இலக்கிய முகவர் கூறினார். “The Satanic Verses” புத்தகத்தை எழுதி பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.
24 வயதான நியூ ஜெர்சியில் வசிக்கும் அமெரிக்க நாட்டவரான லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹாடி மாதர் என்பவரால் திகைத்துப் போன பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டார். 75 வயதான புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் மேற்கு நியூயார்க்கில் உள்ள சௌடகுவா நிறுவனத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் பேசத் தயாராக இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.