சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.
முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரின் மனைவி சாதனா குப்தா இந்த ஆண்டு ஜூலை மாதம் காலமானார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தா. அவரது முதல் மனைவி மால்தி தேவி 2003 இல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.