தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர், மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு தற்போது தான் அந்த நோய்லிருந்து சரியாகி வந்துள்ளார். இத்தகைய நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை சமந்தா ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகின்றார்.
அதில், அவர், “கடுமையாக உழைக்கிறேன். உழைப்பினால் கிடைக்கும் வெற்றிதான் எனக்கு வேண்டும். சம்பள விஷயத்தில் நிர்பந்தம் செய்ய மாட்டேன். தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்து உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தருவதாக சொல்லி கொடுக்க வேண்டும். நான் பணத்திற்காக உழைக்கவில்லை. தீவிரமாக உழைத்தால் அதற்கு தக்க பலன் கிடைக்கும்.
என்னுடைய உடல்நிலை பாதிப்பில் இருந்து மீண்டு வருவது கடினமாக தான் உள்ளது. 3 மாதங்களாக நான் சொல்ல முடியாத அளவிற்கு வேதனையை அனுபவித்து வருகின்றேன். மீண்டும் நான் என் பழைய நிலைக்கு வர போராடிக் கொண்டே இருக்கிறேன்.”என்று கூறியுள்ளார். அத்துடன், சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் குஷி மற்றும் வேறொரு திரைப்படத்தில் நடித்த பின் என்னுடைய உடல் நிலை கருதி சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளேன்.
என் உடல் நிலை சீராகிய பின், மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அப்படி நான் சரியாக நடிக்க வேண்டுமானால் அதற்காக இந்த ஓய்வு கட்டாயம் தேவைப்படுகிறது. இதிலிருந்து மீண்டு வந்து நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன்.” என்று கூறியுள்ளார்.