லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக நடிகர் விஜய் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் – சமந்தா ஜோடி சேரும் 4-வது படம் இதுவாகும். இதற்கு முன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய் – சமந்தா ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.