தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. விஜய் அறிவித்த கொள்கைகள் சரி என்பவர்கள் இருக்கலாம், அதை ஏற்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால், அவர் பேசிய விஷயங்கள் டிரெண்டானது.
விஜயின் பேச்சு.. அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றி இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009இல் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது.
பின்னர், அவர் நடத்திய யாத்திரை அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான்.
இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி தான். தமிழக அரசியலில் மீண்டும் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. இவர், திருச்சியை சேர்ந்தவர். ஏற்கனவே பாமகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். விஜயின் ஸ்டைல், பேச்சு, நடை எல்லாம் அப்படியே ஜெகன் மோகன் ஸ்டைலில் இருக்க காரணமே ஜான் ஆரோக்கியசாமிதான்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி, தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தற்போது இவர் தான், விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும். வியூகங்களை வகுப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான்.
Read More : ”தல, தளபதி படம் வந்தால் தான் தியேட்டருக்கே தீபாவளி”..!! சிவகார்த்திகேயனை வெச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி..!!