நாடு முழுவதும் மொத்தம் 4.99 லட்சம் நியாய விலை கடைகள் உள்ளன. இந்த கடைகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைகேற்ப நியாய விலை கடைகள் அமைந்துள்ளன. மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற நிதியுதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. இதனால் நிறையப் பேர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நாட்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். இதை மீறி பூட்டப்பட்டு இருக்கும் கடைகள் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 97739 04050 என்ற எண்ணுக்கு தங்களது மொபைல் எண்ணில் இருந்து “PDS 102 மூடப்பட்டுள்ளது” என டைப் செய்து அனுப்பலாம். அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
Read More : பத்திரப்பதிவு செய்யும் முன் இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..!!