நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தார்… இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல, என்று தெரிவித்தனர்.. மேலும் இந்த வழக்கில் விசாரிக்க எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..