fbpx

அதிரடி! “செப்டம்பர் 3 ஆம் தேதி சனாதன தர்ம தினம்” நகர மேயர் அறிவிப்பு..!

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உதயநிதிக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இந்தியாவில் சனாதன சர்ச்சை பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது வியப்படைய செய்கிறது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகர மேயர் செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளார். லூயிஸ்வில்லியில் உள்ள கென்டக்கி இந்து கோவிலில் மகா கும்பா அபிஷேகம் கொண்டாட்டத்தின் போது மேயர் கிரேக் கிரீன்பெர்க் சார்பாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் அதிகாரப்பூர்வ பிரகடனத்தை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் ஆன்மிக தலைவர்கள் சித்தானந்த சரஸ்வதி, பர்மார்த் நிகேதன் தலைவர் ரிஷிகேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பகவதி சரஸ்வதி, துணை நிலை ஆளுநர் ஜாக்குலின் கோல்மன், துணை முதல்வர் கெய்ஷா டோர்சி மற்றும் பல ஆன்மிக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Kathir

Next Post

திடீரென ஆற்றுக்குள் பாய்ந்த ஜீப்..!! 4 பேர் பரிதாப பலி..!! தேடுதல் வேட்டையில் மீட்புக் குழு..!! நடந்தது என்ன..?

Wed Sep 6 , 2023
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் புல்கான் பைபாஸில் உள்ள சிவநாத் ஆற்றின் பழைய பாலத்தில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த ஜீப், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எடிஆர்எஃப் குழுவினர் இன்று காலை ஆற்றில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். டிராக்டரைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் இருந்து வாகனத்தை இழுக்க முயன்றனர். அப்போது கயிறு அறுந்து ஆற்றுக்குள் ஜீப் மீண்டும் […]

You May Like