fbpx

மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை…!

TN sand mining

மணல் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மணல்குவாரி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் செயல்படுகிறது. TNsand செயலி மூலமாக பொதுமக்களும் லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து மணலை வாங்கிக்கொள்ளலாம். மணலை 1000ரூபாய்க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. ஆனால் திருச்சி கனிமவளத்துறையின் கணினி பொறியாளர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் கிடங்கில், அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக பதிவு செய்து மணலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர்.

அதனை அவர்கள் சட்ட விரோதமாக பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு, 10,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு பெரும் அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் மணல் விற்பனை தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்தினால், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும். ஆகவே இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்தள் நீதிபதிக சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3ஆம் வாரத்திற்க்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Kathir

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டை இனி வீட்டில் இருந்தே எடுக்கலாம்..!!

Fri Apr 26 , 2024
இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. […]

You May Like