சானியா மிர்சா – சோயப் மாலிக் ஆகிய இருவரும் விவகாரத்து பெற இருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஜோடியாக கருதப்படும் சோயப் மாலிக் – சானியா ஜோடி தற்போது பிரிந்து விட்டதாகவும், இருவரும் விவகாரத்து பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த ஜோடியாக அறியப்படும் நட்சத்திர ஜோடிகள் ஒரு கட்டத்திற்கு பிறகு பிரிந்து வாழ்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது சானியா மிர்சாவும் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமான சானியா மிர்சா – சோயப் மாலிக்கிற்கு 4 வயதில் இசான் எனும் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரிந்து விட்டதாகவும், விரைவில் விவகாரத்து பெற இருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.