fbpx

‘என் மருமகனை தூக்கிலிடுங்கள்..!!’ மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயின் மாமியார் ஆவேசம்..!!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் மாமியார், தனது மருமகனைத் தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் மாமியார், தனது மருமகனைத் தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “சஞ்சய் ராய் எனது மகளைத் திருமணம் செய்துகொண்டு 6 மாதம் நன்றாக வாழ்ந்தார். ஆனால் அதன் பிறகு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எனது மகள் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது, சஞ்சய் ராயின் சித்திரவதையால் கருசிதைந்தது. எனது மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரின் மருத்துவச் செலவுகளை நானே ஏற்றுக்கொண்டேன். சஞ்சய் ராய் நல்லவர் இல்லை. அவரை தூக்கிலிடுங்கள். அவரால் தனியாக இந்த காரியத்தைச் செய்திருக்க முடியாது” எனக் கூறியுள்ளார். 

Read more ; Airpods பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா? உஷாரா இருங்க..!!

English Summary

Sanjay Rai’s mother-in-law, who was arrested in the doctor’s murder case, has said with rage that her son-in-law should be hanged.

Next Post

'யானையை சாய்ச்சுருங்க..!!' தாலியை கழட்டி சபதம்.. ஆற்காடு சுரேஷ் மனைவி வாக்குமூலம்..!!

Tue Aug 20 , 2024
Arkadu Suresh wife, who was absconding for a long time in the Armstrong murder case, has been arrested.

You May Like