நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைக்கும் நிகழ்வானது நடைபெற்றது. வருங்கால இளைஞர்களின் நலனுக்காக கட்சி இணைப்பு நடைபெற்றுள்ளதாக சரத்குமார் அறிவித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.