fbpx

Sarathkumar | ’வணங்கான்’ படத்தில் சரத்குமாரின் முதல் மனைவி..!! கதையில் முக்கிய கதாபாத்திரமே இவர்தானாமே..!!

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில், அவர் விலகியதால், அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. அதேபோல, சூர்யா ஒப்பந்தமாகியிருந்த சமயத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். அவரும் தேதி பிரச்சனைகளால் ஒதுங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்த மமிதா 3 டேக் வாங்கியதால் பாலா தன்னை அடித்ததாகச் சொன்ன வீடியோவும் வைரலானது.

இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு மிஸ் பெங்களூரு பட்டம் வென்ற சாயா தேவியை சரத்குமார் செய்து கொண்டார். பின்னர், கடந்த 2000ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பாலாவின் படத்தில், கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சாயாதேவி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சாயாதேவியின் மகளான நடிகை வரலட்சுமி நடித்திருந்தார்.

சேவ் சக்தி அறக்கட்டளையை சாயாதேவி நிர்வகித்து வருகிறார். மேலும், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், விவாகரத்துக்குப் பின்பு பல பிரச்சனைகளை தான் சந்தித்ததாகவும் திருமணம் என்பது ஒருநாள் கூத்து கிடையாது என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary : Sarathkumar’s first wife is acting in ‘Vanangan’

Read More : BJP உடன் கூட்டணி வைத்த த.மா.கா..!! கடுப்பில் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்த முக்கிய புள்ளி..!!

Chella

Next Post

Abdul Karim Tunda: 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி விடுதலை.! அஜ்மீர் தடா நீதிமன்றம் தீர்ப்பு.!

Thu Feb 29 , 2024
Abdul Karim Tunda: நாட்டையே உலுக்கிய 1993 ஆம் வருட தொடர் குண்டு வெடிப்பு(Serial Bomb Blast) வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா அஜ்மீர் தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். 1992 ஆம் வருடம் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 1993 ஆம் வருடம் பாபர் மசூதி நினைவு நாளில் மும்பை லக்னோ நாக்பூர் ஹைதராபாத் மற்றும் சூரத் […]

You May Like