fbpx

’சோகத்தை பற்றி கிண்டல்’..!! ’அந்த 2 பேருக்கு மட்டும் புரிஞ்சா போதும்’..!! கமல்ஹாசன் அதிரடி..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற 3 முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். இந்நிலையில், வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், மாயா ஸ்ட்ரைக் குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார். விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்தது சரியான முடிவு தான். ஆனால், அதேபோல் இன்னும் இரண்டு பேர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

அப்போது, விஜய்க்கு ஸ்ட்ரைக் ஏன் கொடுத்தேன் என்பதை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிய கமல், ”ஒருத்தருடைய சோகத்தை பற்றி கிண்டல் அடித்து நீங்கள் பேசினீர்கள். அது என்ன என்று நீங்கள் கேட்டால் நான் சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு அது கண்டனத்துக்குரிய ஒரு விஷயம்.

நான் என்ன சொல்கிறேன் என்று விஜய்க்கு புரியும். கூட நின்று பேசி சிரித்தவர்களுக்கும் புரியும். அந்த ரெண்டு பேருக்கும் மட்டும் புரிந்தால் போதும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த சம்பவம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.

Chella

Next Post

’ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வா’..? ’அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல’..!! மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Sun Oct 8 , 2023
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் ஆண்டுக்கு 2 முறை வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. அதாவது, மாணவர்கள் இரண்டு தேர்வு எழுத வேண்டும். அதில், எதில் அதிக மதிப்பெண் எடுக்கப்படுகிறதோ அந்த […]

You May Like