fbpx

ஒரு ரூபாய்க்கு புடவை அறிவித்த ஜவுளிக்கடை .. முந்தியடித்துக்கொண்டு வாங்கிய பெண்கள் ..

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெண்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று புடவை வாங்கினர்.

கிருஷ்ணகிரியில் ஜவுளிக்கடை ஒன்று தள்ளுபடி விலையில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக அறிவித்தது. இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் இருந்து பெண்கள் காத்திருந்தனர். காலையில் கடையை திறந்த உடனே புடவையை வாங்கிவிட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு முந்தியடித்தனர். ஜவுளிக்கடையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சலுகை விலை அறிவிக்கப்பட்டது. முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே இந்த விலையில் புடவை வழங்கப்படும் எனவும் நிபந்தனை விதித்திருந்தது. உரிய அடையாள அட்டையுடன் வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச பேண்ட் மற்றும் ஷர்ட் என அந்த ஜவுளிக்கடை அறிவித்தது. இதுமட்டுமின்றி முதலாம் ஆண்டுவிழாவுக்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

விதவிதமான சேலைகள் , எண்ணற்ற டிசைன்களில் கடை திறப்பு விழாவுக்காகவே வரவைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஜவுளிக்கடை நியமித்திருந்தது. கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவே பெரும்பாடாகி போனது.

Next Post

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு; பயன்பாட்டிற்கு எவ்வளவு?.. விவரம் உள்ளே..!

Sat Sep 10 , 2022
தமிழக மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் வருடம் வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த எட்டுவருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் […]

You May Like