fbpx

சர்ஃபராஸ் கான் – ஜாஹூர் தம்பதிக்கு ஆண் குழந்தை!. நெகிழ்ச்சி!

Sarfaraz Khan: இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் – ஜாஹூர் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெங்களூருவில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 2ஆவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடியது. இதில், ரோகித் சர்மா (52), விராட் கோலி (70), ரிஷப் பண்ட் (99) என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். எனினும் இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல் 2025 தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டிப்போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சர்ஃபராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கும் ரொமானா ஜாஹூர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார்.

Readmore: பணத்தை வேற அக்கவுண்டுக்கு மாத்தி அனுப்பிட்டீங்களா..? திரும்பப் பெறுவது எப்படி..?

English Summary

After 150 vs New Zealand, More Good News For Sarfaraz Khan. Images Says It All

Kokila

Next Post

நாளை உருவாகும் புயல்...! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை...!

Tue Oct 22 , 2024
Heavy rain in Tamil Nadu for next 2 days

You May Like