fbpx

’சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா’..! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது” தவறு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை. திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது. நரிக்குறவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், திமுக தாங்கள்தான் காரணம் என கூறுகின்றனர். மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அதிமுகதான். இன்று வரை திமுக அதற்கு குரல் கொடுக்கவில்லை.

’சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா’..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமையுடன் வலுவான இயக்கமாக அதிமுக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பண்ருட்டியார் உள்பட யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இதனால் எந்த பயனும் இல்லை. எதுவும் நடக்காது. ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு. சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா. கட்சிக்கும் ஓபிஎஸ்-க்கும் சம்பந்தம் இல்லை. எனவே, அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை நீக்கியது சரிதான்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

“ எனக்கு ஹோம் ஒர்க் அலர்ஜி..” நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த 11 வயது சிறுவனின் வீடியோ..

Thu Sep 15 , 2022
தனக்கு வீட்டுப்பாடம் அலர்ஜி இருப்பதாக கூறி சீன சிறுவன் அழுது கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 11 வயது சிறுவனின் தாய் முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படிப்பதாக கூறப்படுகிறது… அந்த வீடியோவில், சிறுவன் வீட்டுப்பாடம் செய்வதைத் தவிர்க்க பாசாங்கு செய்து அழுவதைக் காணலாம். வீட்டுப்பாடம் எழுதிய போது, […]

You May Like