fbpx

மீண்டும் கைதாகிறார் சசிகலா..!! என்ன காரணம்..? லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தனர். ஆனால், பெங்களூரு சிறையில் சட்டவிரோதமாக பல்வேறு சொகுசு வசதிகளை இருவரும் அனுபவித்து வந்ததாக புகார் எழுந்தது.

சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து வெளியே சசிகலா, இளவரசி ஷாப்பிங் சென்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்ற விசாரணைக்கு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கில் சசிகலா தரப்பு முதல் வாய்தாவுக்கு மட்டும் ஆஜராகி இருந்தார். மீதமுள்ள எந்த ஒரு விசாரணைக்கும் சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை. இதனையடுத்து பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சசிகலா, இளவரசி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு ஜாமீன் வழங்க கையெழுத்திட்ட நபர்களுக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி..!! வீடு, அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு..!! பெரும் பரபரப்பு..!!

Tue Sep 5 , 2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி […]

You May Like