நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் வெளியானது. எனவே, இது சைன்ஸ் பிக்ஷன் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்கேனை முடித்துவிட்டு தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்க்கும் புகைப்படத்தையும் வெங்கட் பிரபு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வசீகரா படத்தில் நடிக்க வேண்டும் என விஜய்யை சசிகலா மிரட்டியதாக அந்தணன் கூறியிருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், “போயஸ் கார்டனில் இருந்து விஜய்யிடம் கால்ஷீட் கேட்டார்கள். அதற்கு விஜய் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், சசிகலா கேட்கிறார். அதனால் நீங்கள் உடனே கால்ஷீட் கொடுக்கத்தான் வேண்டும் என மிரட்டித்தான் வசீகராவில் விஜய்யை நடிக்க வைத்தார்கள் என்று அந்தப் படம் வெளியானபோது பல செய்திகள் உலாவின” என தெரிவித்தார்.