விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இக்கோவில் தரையிலிருந்து இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் என்ற சிறப்பு மிக்க கோவில் ஒன்று அமைந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு மாத பௌர்ணமி, பிரதோஷ நாள் மற்றும் அம்மாவாசை தினங்களில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்கள் 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தாணிப்பாறை வனத்துறையின் கேட்டிற்கு அருகே வர வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். மேலும்,
இந்நிலையில் சென்ற மாத மழையின் காரணமாக அந்த மாதமும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.