fbpx

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!

சென்னை ஜெயின் தாமஸ் மௌண்டிஸில் உள்ள மான் போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் தகரி சிலம்பாட்ட கழகம் நடத்தும் இரண்டாம் வருடம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்பப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சிலம்பாட்டம் என்பது தமிழ் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு என்பது நாம் அறிந்தது தான். அதோடு இதுபோன்ற போட்டிகள் அழிந்து விடாமல் இருப்பதற்கு இந்த அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றனர் அதற்கு நன்றி என தெரிவித்தார்.

அதோடு மேலும் பேசிய அவரிடம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் தான் பணியமத்தப்படுகிறார்கள். அதோடு பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு பாதிப்பு ஏற்படாதா? என்று பத்திரிக்கையாளர் எழுதிய கேள்விக்கு பதில் அளித்த அவர் பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு பாட சொன்ன ஏற்படாத விதத்திலும் ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத விதத்திலும் சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை நாட்களாக நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அன்பில் மகேஷ்.

Next Post

இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….! அதிமுக தலைமை சந்திக்குமா….?

Sat Jun 10 , 2023
இன்று இரவு 8:45 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலமாக சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு 9.05 மணி அளவில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு இரவு 9:45 மணி அளவில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவர் சந்திக்கிறார் அதேபோல நாளை காலை 11 40 மணியளவில் […]

You May Like