fbpx

சனிக்கிழமை விரதம் இருந்து கடவுளை வழிபட்டால் இந்த மூன்று பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும்.!

பொதுவாக ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இந்த மூன்றும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மூன்று பலன்களும் முழுவதுமாக கிடைக்க விரதம் இருந்து கடவுளை வழிபட வேண்டும். விரதம் இருப்பது என்பது, வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே தான். இதன்படி சனிக்கிழமை அன்று விரதம் இருந்து இந்த கடவுள்களை வேண்டி வந்தால் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இந்த மூன்றும் கிடைத்து வாழ்க்கையில் முழுமை அடையலாம்.

நவகிரகங்களில் முதன்மையான கிரகமான சனி பகவான் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கும் வல்லமை கொண்டவர். சனி பகவானையே கட்டுப்படுத்தும் வல்லமை பெருமாளுக்கு உண்டு. எனவே சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் நீண்ட ஆயுள் வேண்டி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு வர வேண்டும்.

கர்மவினை மற்றும் பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்க சனி விரதம் ஒன்றே வழி என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாமாதங்களிலும் வரும் சனி கிழமையில் விரதம் இருக்கலாம். குறிப்பாக புரட்டாசி மாத சனி கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதபட்டு வருகிறது. மேலும் பெருமாளை மனதார வேண்டி சனி விரதமிருந்து வந்தால் செல்வம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் என சகல விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

Baskar

Next Post

கட்சித் தொடங்கி ஒரே வாரத்தில் இப்படியா?… விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன?

Sat Feb 10 , 2024
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்திருந்தார். திரையுலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தனது அறிக்கையின் வாயிலாக கூறியிருந்தார். அதனைதொடர்ந்து மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றி கழகம் பல்வேறு நடவடிக்கைகளை […]

You May Like