பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் போல ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகிறது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்..? : உங்களின் 10 வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் பொது வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். ஓர் நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 வரை தவணை செலுத்தலாம். ஒரே முறை முதலீடாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இதில் சேமிக்க முடியும்.
வட்டி விகிதம் : பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் 9.7% வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டி முறையில் கணக்கீடு செய்யப்படுவதால், நல்ல லாபம் கிடைக்கும். பொன்மகள் சேமிப்பு திட்டத்தை போலவே இந்த திட்டத்திலும் வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றப்படுகிறது.
எப்படி முதலீடு செய்வது..? : பொன்மகன் வைப்பு நிதி திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் மகனுக்கு 15 வயது ஆகும் வரை முதலீடு செய்யலாம். பின்னர் 18 வயதாகும் போது பணத்தை எடுக்க முடியும் அல்லது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் முதிர்வு தொகையோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் உண்டு. அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து இத்திட்டத்தில் சேமிப்பு தொடங்கலாம் அல்லது அஞ்சலக அஞ்சல் அலுவலக கணக்கில் உள்ள இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலமாகவும் இந்த திட்டத்தை தொடங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கணக்கு தொடங்கி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் பகுதி அளவு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், கணக்கு தொடங்கி 3 ஆண்டுகள் முடிந்த பின், இதனை காட்டி கடன் வாங்கிக் கொள்ளலாம். வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி -இன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் பொன்மகன் பொது வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தை மற்றொரு அஞ்சல் அலுவலகத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண் குழந்தையின் பேரில் இந்த கணக்கினை தொடங்கலாம். அந்த ஆண் குழந்தை அரசின் எந்த நிதியுதவியும் பெறாதவராக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து, குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தந்தையின் வருமான சான்று, குழந்தையின் பள்ளி சான்று போன்றவற்றை சமர்ப்பித்து இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
Read More : ADMK | ’இப்பவே மெகா கூட்டணி உருவாகியிருச்சே’..!! இரவோடு இரவாக ஆதரவு..!! துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!